விஜய்யை காப்பி அடிக்கிறேனா? குத்திகுத்தி காமிக்கிறது கஷ்டமா இருக்கு!! சஞ்சீவ் ஓபன் டாக்..
சஞ்சீவ்
சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பல படங்களிலும் சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் சஞ்சீவ். நடிகரை தாண்டி நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பராக இருக்கும் சஞ்சீவ், தற்போது வேடுவன் என்ற வெப் தொடரில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
சமீபத்தில் சஞ்சீவ் அளித்த பேட்டியொன்றில், விஜய் மாதிரி நடிப்பது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில், நான் விஜய் மாதிரி வேண்டும் என்றே பண்ணவில்லை, எனக்கு தெரியும் என்னா சுத்தி இருக்கவங்களுக்கு தெரியும்.
விஜய்யை காப்பி அடிக்கிறேனா
மெட்டி ஒலி சீரியலில் இருந்து இப்ப வரைக்கும் அதே பாடி லாங்குவேஜ் தான். அதே மாதிரி தான் நடிச்சிட்டு இருக்கேன், அதே மாதிரி எந்தவொரு நடிக்ரா இருந்தாலும், ஒரு ரோல் மாடல் இருப்பாங்க. ஆனால் நான் வேணும்னு பண்ணல, எனக்கு வருது நான் என்ன பண்றது.
அதுக்காக இப்படி குத்தி குத்தி சொல்லிட்டே இருக்கிறது கஷ்டமா இருக்கும். எவ்வளவு பிரச்சனை தாண்டி 35 வருஷமா நண்பர்களா இருக்கோம், அந்த சந்தோஷத்துக்காக இதெல்லாம் தாங்கிக்கலாம் என்று சஞ்சீவ் வறுத்தத்துடன் தெரிவித்துள்ளார்.