பரவும் தகவல் உண்மையில்லை.. வதந்திக்கு மகாநதி சீரியல் நடிகை லட்சுமி ப்ரியா காட்டம்!

Tamil TV Serials Actress TV Program
By Bhavya Sep 01, 2025 09:30 AM GMT
Report

 மகாநதி

விஜய் தொலைக்காட்சியில் குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில், பிரவீன் பென்னட் இயக்க ஒளிபரப்பாகி வரும் சீரியல் மகாநதி. பல யங் நடிகர்கள் நடிக்க ஒளிபரப்பாகும் இந்த சீரியல் தமிழக ரசிகர்கள் மத்தியில் படு பேவரெட் தொடராக அமைந்துவிட்டது.

பரவும் தகவல் உண்மையில்லை.. வதந்திக்கு மகாநதி சீரியல் நடிகை லட்சுமி ப்ரியா காட்டம்! | Serial Actress About Bigg Boss Entry

லட்சுமி ப்ரியா காட்டம்!

இந்நிலையில் மகாநதி சீரியலில் காவேரியாக நடித்துவந்த லட்சுமி ப்ரியா குறித்து ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

அதாவது, மகாநதி சீரியல் நடிகை லட்சுமி ப்ரியா பிக்பாஸ் 9வது சீசனில் கலந்துகொள்ள இருப்பதாக ஒரு தகவல் வெளிவர, தற்போது அது வெறும் வதந்தி என லட்சுமி ப்ரியா விளக்கம் கொடுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், " பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் என்ட்ரி கொடுக்க போகும் தகவல் பொய்யானது, நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை" என்று தெரிவித்துள்ளார்.