படிப்பை பாதியில் நிறுத்தி வாய்ப்பு கேட்ட சீரியல் நடிகை! தற்போது சின்னத்திரையில் டாப் 10 நடிகை..
தமிழ் தொலைக்காட்சி பெரியளவில் ஹிட் கொடுத்த சீரியல் ராஜா ராணி. நடிகை ஆல்யா மானசா, நடிகர் சஞ்சீவ் இணைந்து நடித்த இந்த சீரியல் டிஆர்பியில் மற்ற சீரியலை தூக்கி போட்டு முதல் இடத்தை பிடித்தது. பின் ரீல் ஜோடிகள் தற்போது ரியல் ஜோடிகளாக திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
ஆல்யா குழந்தை பெற்ற சில மாதங்களில் உடல் எடையை குறைத்து போட்டோஷூட் டிக்டாக் வீடியோ நடன வீடியோ என்ற இணையத்தில் வெளியிட்டு வந்தார். பிறகு மீண்டும் ராஜா ராணி 2 சீசனில் நடித்து வருகிறார். சமீபத்தில் இணையத்தில் ரசிகர்கள் கேள்விக்கு பதிலளித்த ஆல்யா மானசா, நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.
அதற்கு ஆலியா, நான் 12 வகுப்பு படித்து முடித்தப்பின் எத்திராஜ் கல்லூரியில் பிஎஸ்சி கம்யூட்டர் சைன்ஸ் பட்டப்படிப்பினை படிக்க ஆரம்பித்தேன்.
சில காரணங்களால் படிப்பை நிறுத்திவிட்டு நடிக்க ஆரம்பித்தேன். எனக்கு விசா எம்பசி அதிகாரியாக இருக்கவேண்டும் என ஆசை இருந்தது என்று பதிலளித்துள்ளார்.