கொள்ளை அழகு! கோலாகலமாக நடந்த பிரபல சீரியல் நடிகை கண்மணியின் சீமந்தம்

Bharathi Kannamma Viral Photos Actress
By Bhavya May 06, 2025 05:30 AM GMT
Report

கண்மணி

விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற தொடரில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிக்க அறிமுகமாகி பிரபல நாயகியாக வலம் வந்தவர் கண்மணி.

இந்த தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறினாலும் நல்ல ரீச் மக்கள் மத்தியில் இவருக்கு கிடைத்தது. அதன் பின், ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மீண்டும் விஜய் டிவி பக்கம் வந்து மகாநதி தொடரில் நடிக்க துவங்கினார்.

ஆனால் அந்த தொடரில் இருந்தும் பாதியில் வெளியேறினார். அதன்பின் மகாநதி தொடரில் நடிக்க தொடங்கியவர் பின் அதில் இருந்தும் விலகினார்.

பிஸியாக நடித்து கொண்டிருந்தவர் சன் டிவியின் பிரபல தொகுப்பாளரான அஸ்வத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்கள் கர்ப்பமாக இருப்பதையும் அறிவித்தார்கள்.

கொள்ளை அழகு! கோலாகலமாக நடந்த பிரபல சீரியல் நடிகை கண்மணியின் சீமந்தம் | Serial Actress Baby Shower Photos

சீமந்தம்

இந்நிலையில் கண்மணியின் சீமந்தம் படு கோலாகலமாக நடந்துள்ளது, இதில் சீரியல் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.