ஒரு நாளைக்கு இவ்வளவா? வாய்ப்பிளக்க வைக்கும் சீரியல் நடிகை சைத்ராவின் சம்பளம்..

chaitra reddy valimai serialactress kayal
By Edward Mar 16, 2022 05:47 AM GMT
Report

சின்னத்திரை சீரியலில் நடிக்கும் பல ஒரு நாளைக்கு 500 ரூபாயில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாக பெருகிறார்கள். அதிலும் முன்னணி சீரியல் நடிகைகளுக்கு அவர்களின் மார்க்கெட்டிற்கு ஏற்ப சம்பளத்தினை கொடுப்பார்கள்.

அப்படி பிரபல தொலைக்காட்சி சேனலில் கயல் என்கிற சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சீரியலில் கயல் கதாபாத்திரத்தில் நடிகை சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்து வந்தார்.

அதன்பின் கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் கூட நடிகர் அஜித்தின் வலிமை படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்நிலையில் கயல் சீரியலுக்கு சைத்ரா ரெட்டிக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 25 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறாராம். பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் சீரியல் நடிகைகளுக்கு கூட இந்த தொகை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.