விவாகரத்துக்கு பின் என் மகனுக்கு அப்பா இவர் தான்!! சீரியல் நடிகை கிருத்திகா ஓப்பன் டாக்
சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை கிருத்திகா. இவர் பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கிருத்திகா தனது விவாகரத்து குறித்தும் மகனை குறித்தும் ஓப்பனாக பேசியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், தனக்கு 8 வருடத்திற்கு முன்பே விவாகரத்து ஆகிவிட்டதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, சன் டிவியில் ஒளிபரப்பான ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த சமயத்தில் 83 kg எடை இருந்தேன். அந்த சீரியலில் அக்கா கதாபாத்திரம் என்பதால் தோற்றம் இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள். என் கணவர் என்னுடைய உடம்பை பார்த்து, எப்படி இருக்க பாரு.. பெருசா இருக்க என்று உடல் எடையை வைத்து சண்டை போட ஆரம்பித்தார்.
ஒரு கட்டத்தில் சண்டை அதிகம் ஆக, இருவரும் சேர்ந்து பரஸ்பர முடிவை எடுத்து பிரிந்துவிட்டோம் என்று கிருத்திகா பகிர்ந்திருந்தார். மேலும் பேசிய அவர், ஒரு மகன் இருப்பதால், யாராவது தந்தை பற்றி இவனிட கேட்டால் மனம் கஷ்டபடும்.
ஆனால் தற்போது அதுபற்றி கவலை இல்லை என்றும் அண்ணன் இவனுக்கு அப்பா ஸ்தானத்தில் வழி நடத்தி வருகிறார் என்றும் கூறியிருக்கிறார். என் அண்ணனுக்கு என் மகனை தத்து கொடுத்திருப்பதாகவும் அதனால் எனக்கு எந்த கவலையும் இல்லை என்றும் கிருத்திகா தெரிவித்திருக்கிறார்.