இப்போதான் புரியுது!! சீரியலில் இருந்து நடிகை ரக்ஷிதா விலக இதுதான் காரணம்?

actress serial television nini rachitha Rachitha Mahalakshmi
By Edward Feb 06, 2022 04:00 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பு பெற்று வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் சீரியல் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி. இதையடுத்து ஒருசில சீரியலில் நடித்தப்பின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகாவாக நடித்திருந்தார்.

சில காரணங்களால் சமீபத்தில் சீரியலில் இருந்து விலகினார். விலகிய ரக்ஷிதா கன்னடம் மொழி படத்தில் நடிக்கவுள்ளதாக புகைப்படங்கள் வெளியாகின.

இந்நிலையில், அந்த தொலைக்காட்சியை விட்டுவிட்டு மற்றொரு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவுள்ள ஒரு சீரியலில் கமிட்டாகியுள்ளார்.

அதற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படத்தை சமுகவலைத்தளத்தில் ரக்ஷிதா மகாலட்சுமி வெளியிட்டுள்ளார். இதுக்கு தான் அங்க இருந்து போனீங்களா? என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.