முரட்டுத்தனமாக ஆட்டம் போட்ட சீரியல் நடிகை ரவீனா தாஹா.. மிரண்டுபோகும் ரசிகர்கள்..
ரவீனா தாஹா
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா, புலி படத்தில் குட்டி குழந்தையாக நடித்து பிரபலமாகி, ராட்சசன் படத்தில் பள்ளி சிறுமியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை ரவீனா தாஹா.
இப்படங்களை தொடர்ந்து சிறுவயதிலேயே கவர்ச்சிகரமாக ஆட்டம் போட்டும் போட்டோஷூட் எடுத்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். இதனை தொடர்ந்து மெளன ராகம் 2 சீரியலில் முக்கிய ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
பின் இந்த ஆண்டு நிறைவு பெற்ற பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 91 நாட்கள் வீட்டில் இருந்து பின் எலிமினேட் செய்யப்பட்டார்.
போட்டுத்தாக்கு
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் Jodi Are U Ready நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை சென்று டைட்டிலையும் ஜெயித்தார்.
தற்போது நண்பர்களுடன் ஜோடிப்போட்டு டான்ஸ் ஆடி ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் போட்டுத்தாக்கு பாடலுக்கு முரட்டுத்தனமாக ஆட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ரவீனா.