அசிங்கமாக வார்த்தை சொல்லி அப்படி கூறுகிறார்கள்... நடிகை மாஸ் பதில்
நடிகை ரேஷ்மா
சினிமா ரசிகர்களின் மனதை ஆள்வது இப்போது சீரியல் நடிகைகள் தான்.
வாரா வாரம் தான் புதுப்படங்கள் மூலம் நடிகைகளை காணலாம், ஆனால் சீரியல் மூலம் அன்றாடம் மக்கள் நினைவில் எப்போதும் இருந்து வருகிறார்கள் சீரியல் நடிகைகள். தற்போது ஒரு சீரியல் நடிகை தொடர்ந்து சீரியல்கள் நடித்தாலும் தனக்கு வந்த மோசமான குறித்து பேசியுள்ளார்.
அந்த நடிகை யார் என்றால் இப்போது சன் டிவியில் செல்லமே செல்லம் சீரியல் நடித்து வரும் ரேஷ்மா தான். அவரது நிறம் வைத்து நிறைய மோசமான கமெண்ட் வருகிறதாம். அசிங்கமான ஒரு வார்த்தை கூறி கருப்பு நிறத்தை விமர்சனம் செய்கிறார்கள்.

அந்த வார்த்தை கோபத்தை தூண்டும், ஆனால் வலிக்கல. ஏன் என்றால் அது அவர்களுடைய சொந்த எண்ணத்தைத்தான் காட்டுகிறது. நான் வெள்யை ஆக வேண்டும் என நினைத்திருந்தால் எப்போதோ ஆகியிருக்கலாம், ஆனால் என் நிறத்தை நான் நேசிக்கிறேன் என கூறியுள்ளார்.