கணவருடன் பிரச்சனையா!! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சல்மா..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ரோகினி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சீரியல் நடிகை சல்மா. ஆரம்பத்தில் விளம்பரப்படங்களில் நடித்தும் சிவகார்த்திகேயன் நடித்த விளம்பரத்திலும் நடித்திருந்தார் சல்மா.
பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் கிடைக்காமல் போயுள்ளது. அதன்பின் ஒருசில சீரியல்களில் சிறு ரோலில் நடித்து வந்த சல்மாவிற்கு சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். சல்மாவிற்கு திருமணமாகி ஆண் குழந்தை இருக்கிறது.
ஆனால் இணையத்தில் ஆக்டிவாக இருந்து மகனுடன் மட்டும் எடுத்த புகைப்படத்தை பகிரும் சல்மா, கணவரின் புகைப்படத்தை காட்டாமல் இருந்து வந்தார். இதனால் கணவருடன் பிரச்சனை என்று செய்திகள் சமீபகாலமாக பகிரப்பட்டு வந்தது.
இதனை அறிந்த சல்மா, இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் ஒரு பதிவினை பகிர்ந்திருக்கிறார். அதில் தன் கணவர் அருண் மற்றும் மகனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.