10-ஆம் வகுப்பு படிக்கும் போதே என் அம்மாவை கூப்பிட்டாங்க? ஓப்பனான கூறிய சீரியல் நடிகை..
சினிமாவில் காலெடி எடுத்து வைக்கும் அனைத்து பெண்களும் வெளிப்படையாகவோ மறைமுகமாகவும் பல இன்னல்களை சந்திக்க தான் நேரும். அப்படிபட்ட சினிமாவாக மாறியிருக்கிறது தற்போதைய சினிமாத்துறை.
வெள்ளித்திரை, சின்னத்திரை என்று நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனையை வெளிப்படையாக கூறி வருவது அதிகரித்து வருகிறது. அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் செந்தூரப்பூவே சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகியவர் ஸ்ரீநிதி.
இந்த சீரியலுக்கு பிறகு தற்போது மற்றொரு தொலைக்காட்சி சீரியலிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது நடிப்பதற்காக சென்றிருந்தேன். அப்போது என் அம்மாவும் கூட இருக்கும் போது மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் வாய்ப்பிற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று ஒருவர் கூறினார்.
எனக்கு புரியாத வயது. காபிக்கு பதில் டீ, தங்கௌவதர்கு இடம் போன்றவற்றில் அட்ஜெஸ்ட் என்று நினைத்து கொண்ட என் அம்மா சரி என்றார். ஆனால் அட்ஜெஸ்ட் இல்லை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று அழுத்தமாக கூறினார்.
மகள் இல்லை என்றாலும் பரவாயில்லை அம்மா அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யலாம் என்று கூறினார். உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டோம் என்று தெரிவித்துள்ளார். சினிமாவில் பிரபலங்களுக்கு தான் இந்த பிரச்சனை என்றால் அவர்களது குடும்பத்தினரையும் பாதிக்கிறது என்று கூறியுள்ளார் சீரியல் நடிகை ஸ்ரீநிதி.