சீரியலே உசுராக கருதும் நடிகை!! 42 வயதில் திருமணமாகாத நடிகை ஸ்ருதி ராஜா இது?
சின்னத்திரை, வெள்ளித்திரையில் தற்போதை நிலைமையில் அக்கடதேசத்து நடிகைகளும் மலையாள நடிகைகளும் தான் அதிகளவில் காணப்படுகிறார்கள். அப்படி மலையாள பெண்களாக தமிழ் சினிமாவிலும் சீரியல்களிலும் நடித்து முன்னணி இடத்தையும் பிடித்து விடுகிறார்கள்.
அந்தவரிசையில் மாண்புமிகு மாணவன் படத்தில் விஜய்யுடன் நடித்தவர் நடிகை ஸ்ருதி ராஜ். இப்படத்திற்கு பிறகு ஒருசில தமிழ் படங்களிலும், மலையாளம், கன்னட மொழிப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் சினிமா செட்டாகாது என்று சின்னத்திரையில் கலமிரங்கினார்.
அப்படி 2009ல் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகிய தென்றல் என்ற சீரியலில் துளசி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை ஈர்த்தார். 6 ஆண்டுகளுக்கும் மேல் ஒளிப்பரப்பாகிய சீரியலில் அப்போது டிஆர்பியில் முதல் இடத்தில் இருந்தது.
பின் திருமதி செல்வம், ஆபிஸ், அபூர்வ ராகங்கள், அழகி, தாலாட்டு போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது 42 வயதாகும் நடிகை ஸ்ருதி ராஜ் இன்று வரையில் திருமணம் செய்யாமல் தனிமையில் இருந்து வருகிறார்.
இன்னும் இளமையுடன் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள். இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து சில ரீல் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார் ஸ்ருதி ராஜ்.