சிம்பு என்னை காதலித்ததாக கூறியது பொய்! அப்படியே பல்டி அடித்த சீரியல் நடிகை..
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகிய கனா காணும் காலங்கள் சீரியலில் பள்ளி பருவ சிறுமியாக நடித்து அறிமுகமாகி தற்போது முக்கிய சீரியல்கள் நடித்து வரும் நடிகை ஸ்ரீநிதி. வலிமை படத்தின் விமர்சனத்தை கூறி சர்ச்சையில் சிக்கிய அவர் வலிமை படம் சுமார் தான் என்று மீண்டும் இணையத்தில் கூறி வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் சிம்பு தன்னை காதலிப்பதாகவும் இருவரையும் சேர்த்து வையுங்கள் என்றும் கூறி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இதனை தொடர்ந்து நடிகை நக்ஷத்ரா திருமணத்தை பற்றி சர்ச்சையாக பேசியும் பரபரப்பை கிளப்பினார்.
தற்போது நடிகை ஷகிலாவுக்கு அளித்த பேட்டியொன்றில் சிம்பு என்னை காதலிப்பதாக கூறியது உண்மை தான் ஆனால், நான் சரியான நிலைப்பாட்டில் இல்லாமல் இருந்தேன். நானாகவே சிம்பு காதலிப்பதாக கற்பனை செய்து கொண்டிருந்தேன்.
அதை தற்போது தான் யோசித்து பார்த்ததில் உண்மையிலேயே சிம்பு என்னை காதலித்து இருந்தால் எதாவது ஒரு விசயம் கூறி இருப்பார். அப்படி அவர் அவர் பேசவில்லை என்று யோசித்தேன்.
என்னை மாற்றிக்கொண்டு கற்பனையில் இருந்து வெளியே வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். இனிமேல் சிம்பு அவளுக்கு அண்ணன் போன்றவர் இனி யாரும் ஸ்ரீநிதியை திட்டாதீர்கள் என்று கூறியிருக்கிறார் நடிகை ஷகிலா.