15 வயதில் மகளுக்காக அட்ஜெஸ்மெண்ட்? சீரியல் நடிகையின் அம்மாவிடம் கேவலமாக பேசிய பிரபலம்
சினிமாவில் நட்சத்திரங்களுக்கு வாய்ப்பிற்காக பல இடத்தில் இருந்து அட்ஜெஸ்ட் செய்ய அழைப்பு வரும். அதிலும் இளம் நடிகைகள் வாய்ப்பு தேடி செல்லும் இடமெங்கும் இந்த மாதிரியான பிரச்சனைகளை தான் சந்தித்து வருவதாக பலர் கூறி வருகிறார்கள்.
அதில் சின்னத்திரை நடிகைகளுக்கு நடந்துள்ளது என சமீபகாலமாக நடிகைகள் ஓப்பனாக கூறி வருகிறார்கள். அப்படி செந்தூர பூவே சீரியல் மூலம் சீரியல் நடிகையாக பிரபலமானார் ஸ்ரீநிதி. ஆல்பம் பாடல்களில் நடித்து வந்த ஸ்ரீநிதி சீரியல் நடிகையாக அவதாரம் எடுக்க ஆரம்பித்தார்.
தற்போது சிறப்பு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டும் வருகிறார். மேலும் மலையாளத்தில் பாக்யலட்சுமி சீரியலின் ரீமேக்கில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தனக்கு ஏற்பட்ட அஸ்ஜெஸ்ட்மெண்ட் விவகாரத்தை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.
நான் 10ஆம் வகுப்பு படிக்கும் போது ஒரு மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து ஆடிஷனுக்காக என் அம்மாவுடன் சென்றிருந்தேன். அங்கே என்னுடம் அட்ஜெஸ்ட் செய்ய முடியுமா என்று கேட்டனர். எனக்கு அது என்னவென்று புரியவில்லை.
இதற்கு பிறகு மீண்டும் அனைத்திலும் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என்று கேட்டனர். நாங்கள் அப்படியான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் கிடையாது என கூறினோம். உடனே மகள் இல்லை என்றால் கூட அம்மா பரவாயில்லை என்று கூறினார்கள்.
இதை கேட்டதும் அம்மாவிற்கு மனசு உடைந்து போனது. உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டோம் என்று கூறியுள்ளார் ஸ்ரீநிதி. தற்போது இச்செய்தி சின்னத்திரையில் அதிர்ச்சி வலையை ஏற்படுத்தி வருகிறது.