பாலா இப்படி உயர விக்ரம் மனைவி செய்த செயல் தான் காரணம்! என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் மக்களால் வியப்புடன் பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருப்பது இயக்குனர் பாலாவின் படங்கள் தான். கடின உழைப்பு என அனைத்திலும் சிறப்பாக எடுத்து கொடுப்பதில் சிறந்து விளங்கி வந்தார் பாலா. அப்படி அவரின் உழைப்பில் முதல் படமாக அமைந்தது சேது.
விக்ரம், அபிதா, சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வெளியானது. முதலில் இப்படத்தில் விக்ரம் கமிட்டாகவில்லையாம். அவருக்கு முன் நடிகர் விக்னேஷ் நடிக்கவிருந்தாராம். மேலும் அப்படம் முதலில் அகிலன் என்று பெயரிடப்பட்டது. விக்னேஷ் நடிக்கமுடியாமல் போக படத்தின் டைட்டிலை சேது என பெயரிட்டனர்.
இதைதொடர்ந்து படம் ஒரே ஒரு தியேட்டரில் வெளியாக பல பிரச்சனைகளை சந்தித்ததாம். அதனால் விக்ரம் மனைவி சைலஜா அவரது காசை போட்டு படத்தின் பிரமோஷனுக்காக உதவி செய்துள்ளார்.
இதன்பின் படம் மக்கள் மனதை கவர்ந்து பல விருதுகளை தட்டிச்சென்றது. பாலா, விக்ரம் உள்ளிட்ட பலரின் வாழ்க்கையை மாற்றிய படமாக சைலஜாவால் நிகழ்ந்துள்ளது.