சிவகார்த்திகேயன் ரொம்பவே அதற்காக கஷ்டப்பட்டுள்ளார்!! சந்தோஷ் நாராயணன் சொன்ன உண்மை..

Sivakarthikeyan Santhosh Narayanan
By Jai May 22, 2026 02:30 AM GMT
Report

சேயோன் 

தாய் கிழவி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அப்படத்தின் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் நடித்து வருகிறார். கமல் ஹாசன் 2வது முறையாக சிவகார்த்திகேயனை வைத்து இப்படத்தை தயாரித்து வருகிறார். படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகி பெரிய வரவேற்பையும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

சிவகார்த்திகேயன் ரொம்பவே அதற்காக கஷ்டப்பட்டுள்ளார்!! சந்தோஷ் நாராயணன் சொன்ன உண்மை.. | Seyon Is My Personal Statement Santhosh Narayanan

இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

சிவகார்த்திகேயன்

அதில், சேயோன் படம் என்னுடைய பர்சனல் ஸ்டேட்மெண்ட் மாதிரிதான் இருக்கும். இதை நான் ஒரு வேலையாக பார்க்கவில்லை. நான் கற்றுக்கொண்டதை வைத்து என்னுடைய சிறந்ததை கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்படம் ரசிகர்களை பயங்கரமாக எண்டர்டெயின்மெண்ட் செய்யும் என்று நம்புகிறேன்.

சிவகார்த்திகேயன் ரொம்பவே அதற்காக கஷ்டப்பட்டுள்ளார்!! சந்தோஷ் நாராயணன் சொன்ன உண்மை.. | Seyon Is My Personal Statement Santhosh Narayanan

சிவகார்த்திகேயன் ரொம்பவே கஷ்டப்பட்டார். தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வருவது கஷ்டம். அதை உடைத்து பெரிய இடத்திற்கு சென்றார். நாங்கள் இரண்டு பேரும் ஓபனாக பேசக்கூடியவர்கள். இங்கே எங்களுக்கு யாரையும் தெரியாது. இன்று சிவாவை நினைத்து எனக்கு பெரிய பெருமை என்று பேசியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.