ராதிகாவையும் விட்டுவைக்காத பாலய்யா!! நீங்களாம் மனுஷங்களாடா திட்டி தீர்த்த பிரபல நடிகை.. வெளுத்து வாங்கிய பிரபலம்

Radhika Apte Indian Actress Nandamuri Balakrishna Tamil Actress Actress
By Edward Feb 19, 2024 08:30 AM GMT
Report

இந்திய சினிமாவில் பலவிதமான போல்ட்-ஆன காட்சிகளில் நடித்து பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா ஆப்தே. 2005ல் கதாநாயகியாக இந்தி மொழியில் சினிமா பயணத்தை ஆரம்பித்து பெங்காளி, மராத்தி, தெலுங்கு, தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப்படங்களில் நடித்து டாப் இடத்தினை பிடித்தார். படத்தின் கதைக்காக ஆடையின்றியும் நடித்து கொடுக்கும் ராதிகா ஆப்தே, பல சர்ச்சையான கருத்துக்களால் பரபரப்பையும் ஏற்படுத்தி வருவார்.

ராதிகாவையும் விட்டுவைக்காத பாலய்யா!! நீங்களாம் மனுஷங்களாடா திட்டி தீர்த்த பிரபல நடிகை.. வெளுத்து வாங்கிய பிரபலம் | Seyyaaru Balu Open Radhika Apte Statement Balaiya

சமீபத்தில், மோசமான அனுபவத்தை பற்றி பேட்டியொன்றில் பகிர்ந்திருக்கிறார். நான் பல சினிமாத்துறையில் பணியாற்றி இருக்கிறேன், ஆனால் தெலுங்கு சினிமாத்துறை தேசப்பற்றும் ஆணாதிக்கமும் நிறைந்த ஒரு துறை. அவர்களின் படங்களில் பெண் கதாபாத்திரங்களை ஆண்களை கடவுள் போல் வழிபடுபவர்களாக இருக்கிறார்கள்.

படத்தின் ஷூட்டிங்கில் அவர்கள் பெண் நடிகர்களை நடத்தும் விதம் மோசமானது. மூன்றாம் நபரை நடத்துவது போல் உங்களை நடத்துவார்கள் என்றும் உங்கள் தேவை என்ன என்பது கூட அவர்கள் கேட்கமாட்டார்கள். இது மாதிரியான நடத்தைகளுடன் நான் கடுமையாக போராடி ஒரு வழியாக இதற்கு நான் ஒரு முடிவு செய்துவிட்டேன். என் வழியை நான் தேர்வு செய்து அந்த துறையில் இருந்து விலகிவிட்டதாகவும் ராதிகா ஆப்தே கூறியிருக்கிறார்.

ராதிகாவையும் விட்டுவைக்காத பாலய்யா!! நீங்களாம் மனுஷங்களாடா திட்டி தீர்த்த பிரபல நடிகை.. வெளுத்து வாங்கிய பிரபலம் | Seyyaaru Balu Open Radhika Apte Statement Balaiya

இந்த விவகாரம் பற்றி சினிமா விமர்சகர் செய்யாறு பாலு ராதிகா ஆப்தேவை பிரபல நடிகர் நடத்திய விதத்தை தான் அப்படி கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார். என்னை மிகவும் கொடுமைப்படுத்திய நடிகருடன் இரு படங்களில் நடித்ததாக கூறியிருந்தார் ராதிகா. அந்த நடிகர் பாலய்யா தான். லெஜெண்ட் படத்தில் அவருடன் நடித்த போது பல சிரமங்களை அனுபவித்திருக்கிறார்.

இரண்டாம் படத்தில் ராதிகா தான் வேண்டும் என்று பாலாய்யா முடிவெடுத்ததாக அப்படத்தின் இயக்குனர் தன்னிடம் கூறியதாகவும் அப்படத்தின் பெயர் லயன். அப்படத்தில் பாலியல் ரீதியாக மறைமுகமாகவும் தெரிந்தும் செய்திருக்கிறார். இதையே தான் பிக்பாஸ் நடிகை விசித்ராவிடம் செய்திருக்கிறார். ஒரு படத்தில் மட்டும் தான் தெலுங்கு சினிமாவில் நடித்ததால் பாலய்யா படம் தான் அது என்று கூறினார்கள்.

மேடையில் ஓவர் பந்தா காட்டி அசிங்கப்படுத்திய நயன்தாரா.. பேரை கேட்டாலே வெறுப்பாகும் முன்னணி நடிகர்..

மேடையில் ஓவர் பந்தா காட்டி அசிங்கப்படுத்திய நயன்தாரா.. பேரை கேட்டாலே வெறுப்பாகும் முன்னணி நடிகர்..

பாலக்கிருஷ்ணா அப்படிப்பட்டவர் தான். ஆனால் கபாலி படத்தில் நடித்த போது ரஜினி சார் போல் நான் ஒரு ஜெண்டில்மேனை நான் பார்த்ததில்லை என்று ராதிகா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். அதை ராதிகா அப்படி கூறுவதற்கு காரணம், அவர்களுக்குள் உள்ள காயம் எந்தளவிற்கு இருந்தால் பாலய்யா எப்படி நடந்திருப்பார்.

ஒருவர் பண்ணிய தப்பு ஒரு சினிமாத்துறையையே மோசமான துறை என்று நடிகையின் ஸ்டேட்மெண்ட் கொண்டு வந்திருகிறது பாலகிருஷ்ணாவை செய்யாறு பாலு விமர்சித்து பேசியிருக்கிறார்.