அஜித்தால் மனைவியிடம் திட்டு வாங்கிய வாரிசு பட நடிகர்..அஜித்தின் சுவாரசிய சம்பவம்
துணிவு - வாரிசு
இந்திய திரைத்துறையில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவர் நடிப்பில் 11-ம் தேதி வெளியான துணிவு திரைப்படம் வசூலை அள்ளி குவித்து வருகிறது.
அதே தினத்தில் வெளியான விஜய்யின் வாரிசு திரைப்படமும் குடும்பங்கள் ரசிக்கும் படி இருப்பதாக பாசிட்டிவான விமர்சனங்களை ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர்.
அஜித் குமார்
இந்நிலையில் வாரிசு படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்த நடிகர் ஷாமின் குழந்தைகளும், அஜித்தின் குழந்தைகளும் ஒரே பள்ளியில் தான் படிக்கிறார்கள்.
அப்போது ஷாமின் மனைவி பள்ளி விழாவிற்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் அஜித் தன் மகளுக்காக அங்கு வந்திருந்தாராம்.
இதை பார்த்த ஷாமின் மனைவி ஷாமிற்கு போன் செய்து, பிஸியாக நடிக்கும் அஜித் சார் கூட தன் குழந்தைகளுக்காக வந்துள்ளார். ஆனால் நீங்கள் ஒருமுறை கூட நம் குழந்தைகளுக்காக வந்ததில்லை என்று திட்டிவிட்டாராம்.
குடும்பம் தான் முக்கியம்
இதனால் அடுத்து முறை பள்ளி விழாவிற்கு சென்றுள்ளார் ஷாம். அப்போது நடிகர் அஜித் வருவதை பார்த்து ஷாக் ஆகியுள்ளார். அஜித்திடம் பேசிய ஷாம், " எப்படி அண்ணா பிஸியாக இருக்கும் நீங்கள் இது போன்ற நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறீர்கள்? என கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு அஜித், " நமக்கு குடும்பம் தான் முக்கியம் என சாதாரணமாக கூறினாராம். அன்று முதல் ஷாம் தன் குழந்தைகளின் பள்ளி விழாவிற்கு அடிக்கடி சென்று வருகிறாராம்.