திருமணமாகி இதுவரை ஆக்டிவாக இல்லாத ஆர்யன்! சீரியல் நடிகை ஷபானா மட்டும் இப்படியா?

sembaruthi baakiyalakshmi shabana reshma aryan
By Edward Dec 18, 2021 10:34 AM GMT
Report

தொலைக்காட்சி சீரியல் பிரபலங்கள் நண்பர்களாக இருந்து பின் காதலர்களாக மாறி ரியல் ஜோடிகளாகிவிடுவார்கள். அப்படி செம்பருத்தி ஷபானாவும் பாக்யலட்சுமி ஆர்யனும் காதலித்து திடிரென திருமணம் செய்து கொண்டனர்.

ஜோடியாக திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட இருவரும் தற்போது வரை எந்த பதிவிலும் ஜோடியாக புகைப்படத்தை வெளியிடவில்லை. இருவருக்கும் ஹனிமூன் சமயத்தில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் திருமணத்தை நடத்தி கொடுத்த நடிகை ரேஷ்மாவிடம் ரகளையில் ஈடுபட்டதாகவும் ஆர்யன் குடும்பத்தினர் பற்றிய செய்தி வெளியானது.

இந்நிலையில், ஷபானா தம் தோழிகளான ரேஷ்மா மற்றும் சைத்ரா லதாவுடன் இணைந்து போட்டோஷூட் எடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் லக்கி நவம்பர் என்று பதிவிட்டுள்ளது, தங்கள் மூவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருமணத்தை தான் அப்படி கூறியிருக்கிறார் ஷபானா.

இதிலிருந்து ஆர்யனுக்கும் ஷபானாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று ரசிகர்களுக்கு தெரிவிக்க இந்த பதிவினை போட்டு இருக்கலாம் என கூறி வருகிறார்கள்.

திருமணமாகி இதுவரை ஆக்டிவாக இல்லாத ஆர்யன்! சீரியல் நடிகை ஷபானா மட்டும் இப்படியா? | Shabana Post Photoshoot By Aryan