கல்யாணத்தை முடித்த கையோடு ஜோடியாக வந்த VIROSH!! புகைப்படங்கள்..

Vijay Deverakonda Rashmika Mandanna Actors Indian Actress
By Edward Feb 27, 2026 10:30 AM GMT
Report

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா

நடிகர் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் நேற்று பிப்ரவரி 26 ஆம் தேதி உதய்ப்பூர் அரண்மனையில் பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்தது. விஜய் தேவரகொண்டாவின் தெலுங்கு கலாச்சாரப்படி ஒருமுறையும், ராஷ்மிகாவின் கன்னடம் கலாச்சாரப்படி மற்றொரு முறையும் திருமணம் நடந்ததாக தகவல் வெளியானது.

இதன்பின் தங்களின் திருமண புகைப்படங்களை விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் தங்களுடைய சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்தனர்.

கல்யாணத்தை முடித்த கையோடு ஜோடியாக வந்த VIROSH!! புகைப்படங்கள்.. | Rashmika Vijay Deverakonda Udaipur Airport

தற்போது முதன்முதலாக திருமணத்தை முடித்த கையோடு இருவரும் ஜோடியாக உதய்ப்பூர் விமான நிலையத்திற்கு வந்து அனைவரது அன்பையும் பெற்றுள்ளனர்.

இருவரும் ஜோடியாக புகைப்பட கலைஞர்களுக்கு போஸ் கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. வரும் மார்ச் 4 ஆம் தேதி ராஷ்மிகா - விஜய்யின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ