உன்னால் முடியுமான்னு சவால் விட்ட அம்மா!! செய்து காட்டி சாதித்த ஷாருக்கான்...
ஷாருக்கான்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகனாவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகர் ஷாருக்கான். தற்போது பல ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கும் ஷாருக்கான், பள்ளியில் ஒரு சிறந்த மாணவராக திகழ்ந்தார். அவரின் நண்பர்கள் கூடம் ஷாருக்கான் வாழ்க்கையில் சாதிக்கத்தேவையான அர்ப்பணிப்பும், கவர்ச்சியும் வாரிட்ம இருந்ததாக கூறியிருந்தனர்.
ஷாருக், டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படிப்பையும், ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் ஊடகத்தொடர்பியலையும் பயின்றிருக்கிறார். அதேசமயம் டெல்லி பல்கலைக்கழகத்தில் செர்வதற்கு முன், அவர் ஐஐடி நுழைவுத்தேர்வில் வெற்றியும் பெற்றியிருக்கிறாராம்.
சவால் விட்ட அம்மா
2000 ஆம் ஆண்டு ஷருக்கான் பிபிசியில் கரண் தாப்பருடன் நேர்காணல் கலந்து கொண்டு பேசியபோது இந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதில், தன் பள்ளிப்படிப்பில் அறிவியல் படித்தேன், ஆனால் நான் பொருளாதாரம் படிக்க விரும்புகிறேன் என்று அம்மாவிடம் சொன்னேன்.
அப்போது நீ பொருளாதாரம் படிக்க விரும்புகிறாயா? அப்படியானால் ஐஐடி நுழைவுத்தேர்வை உன்னால் எழுதமுடியுமா? இந்த இன் ஜினியரிங் நுழைவுத்தேர்வை உன்னால் எழுத முடியுமா என்று கேட்டார். என்னால் முடியும் என்று சொன்னதும் சரி அதை எனக்கு செய்து காட்டு என்று அம்மா சொன்னார்.
அதற்காக நான் அந்த தேர்வை எழுதி, அதில் தேர்ச்சி பெற்றேன். பின் நீ இதை எடுத்துக்கொள்ளத்தேவையில்லை, இப்போது சென்று உன் பொருளாதாரப்படிப்பை தொடங்கு என்று சொன்னார் என்று ஷாருக்கான் தெரிவித்தார். தற்போது பல தொழில்களை ஆரம்பித்து பல விதத்தில் சம்பாதிக்கும் ஷாருக்கானின் சொத்து மதிப்பு சுமார் 7.7 ஆயிரம் ரூபாய் கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.