நள்ளிரவில் திடீர் விசிட்! நயன்தாராவிற்கு முத்தம் கொடுத்து விடை பெற்ற ஷாருக்கான்..வெளியான வீடியோ
பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தான் ஷாருக்கான். சமீபத்தில் இவர் நடிப்பில் பதான் திரைப்பம் வெளியாகி 900 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
இதையடுத்து ஷாருக்கான் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

திடீர் விசிட்
நயன்தாராவிற்கு கடந்த ஆண்டு இரட்டை குழந்தை பிறந்தது. அவர்களை பார்ப்பதற்காக ஷாருக்கான் சென்னையில் உள்ள நயன்தாராவின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஷாருக்கானின் வருகையை அறிந்த ரசிகர்கள் நயன்தாரா வீட்டிற்கு முன்பு கூட்டம் குவிந்தது.
ஷாருக்கானை வழியனுப்பி வைக்க நயன்தாரா சென்றுள்ளார். அப்போது ஷாருக்கான் அவருக்கு முத்தம் கொடுத்து அங்கு இருந்து விடைபெற்றார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
OMG!! #ShahRukhKhan kissed #Nayanthara ??❤❤ pic.twitter.com/Ul9UWLPgEd
— ꜱʜᴀʜʀᴜᴋʜ ᴋɪɴɢᴅᴏᴍ ⚡ (@shahrukingdom) February 11, 2023