24 லட்சம் வாடகை வீட்டுக்கு குடியேறும் ஷாருக்கான் குடும்பம்!! இதுதான் காரணம்..

Shah Rukh Khan Actors Bollywood
By Edward Mar 21, 2025 04:00 PM GMT
Report

ஷாருக்கான்

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஷாருக்கான், லயன் படத்தை தொடர்ந்து பதான் 2 படத்தில் விரைவில் நடிக்கவிருக்கிறார். பல கோடிக்கு அதிபதியாக இருக்கும் ஷாருக்கான், மும்பையின் ஒரு அடையாளமாக இருக்கும் மன்னத் வீட்டில் வசிந்து வந்தார்.

24 லட்சம் வாடகை வீட்டுக்கு குடியேறும் ஷாருக்கான் குடும்பம்!! இதுதான் காரணம்.. | Shah Rukh Khan Out Mannat Move To Pali Hill

24 லட்சம் வாடகை

இந்நிலையில், ஷாருக்கான் தனது மனைவி கெளரி கான், பிள்ளைகள் உள்ளிட்டவர்களுடன் மன்னத் வீட்டினை காலி செய்து ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் 24 லட்ச ரூபாய் வாடகைக்கு குடியேறவுள்ளார்களாம்.

வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மன்னத் வீட்டில் சில புதுப்பித்தல் பணிகள் தொடங்கவுள்ளதாகவும் அப்பணிகள் சுமார் 2 ஆண்டுகள் நடக்கவுள்ளதால் ஷாருக்கான் குடும்பம் அங்கிருந்தால் சில சிரமங்கள் ஏற்படும் என்ற காரணத்தால் அங்கிருந்து வெளியேற முடிவெடுத்துள்ளார்களாம்.

24 லட்சம் வாடகை வீட்டுக்கு குடியேறும் ஷாருக்கான் குடும்பம்!! இதுதான் காரணம்.. | Shah Rukh Khan Out Mannat Move To Pali Hill

மேலும் தன் குடும்பத்துடன் அவர்களின் விருப்படி, பாந்த்ராவின் பாலி ஹில்லில் உள்ள, ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் 24 லட்ச ரூபாய் வாடகைக்கு செல்லவுள்ளார்கள். ஷாருக்கானின் மன்னத் வீடு சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.