அட்லீக்கு அடிமேல் அடி! ஷாருக் பட டீஸர் வந்த மறுநாளே இப்படி ஒரு ஷாக்

Shah Rukh Khan Atlee Kumar
By Parthiban.A Jun 05, 2022 02:00 PM GMT
Report

அட்லீ தமிழ் சினிமாவில் எந்த உயரத்தில் இருக்கிறார் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. தொடர்ந்த விஜய்யை வைத்து ஹிட் படங்கள் கொடுத்த அவர் தற்போது தனது அடுத்த படத்திற்கக ஷாருக் கான் உடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார்.

இந்த படத்திற்காக அட்லீ சில வருடங்களை வெயிட்டிங்கிலேயே வீணடித்துவிட்டார். இந்நிலையில் ஒருவழியாக நேற்று முன்தினம் தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. ஜவான் என பெயரிடப்பட்டு இருக்கும் அந்த படத்தின் டீஸர் பெரிய அளவில் வைரலாகி இருந்தது.

இந்நிலையில் அடுத்த நாளே ஒரு ஷாக்கிங் நியூஸ் வந்திருக்கிறது. ஷாருக் கானுக்கு கொரோனா பாசிடிவ் என்கிற செய்தி தான் அது. ஏற்கனவே அதிகம் தாமதம் ஆகிவிட்ட இந்த படத்தின் ஷூட்டிங் இந்த காரணத்தால் மேலும் தள்ளி போகிறது.

அட்லீக்கு மட்டும் அடி மேல் அடி.