நம்ப வைத்து ஏமாத்தினாரா ஷாருக்கான்? அட்லீக்கு உயிர் கொடுத்த நயன்தாரா

bollywood lion atlee nayanthara shah-rukh-khan
By Edward Apr 09, 2022 11:45 AM GMT
Report

நடிகர் ஆர்யா, ஜெய், நடிகை நயன்தாரா, நஸ்ரியா, சந்தானம் உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து ஹிட் கொடுத்த படம் ராஜா ராணி. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியையும் நல்ல விமர்சனத்தையும் பெற்றப்பின் நடிகர் விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட ஹார்ட்ரிக் படங்களை கொடுத்து வந்தார் அட்லீ.

இடையில் காப்பி இயக்குனர் என்ற பெயரை பெற்ற கிண்டலடிக்கப்பட்டு வந்தார். இதன்பின் பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டாரும் கிங்காங்குமான ஷாருக்கானுடன் லயன் என்ற படத்தினை இயக்க கமிட்டாகினார்.

இதற்காக நயன் தாராவுன் கமிட் செய்யப்பட்டு கோவாவில் படப்பிடிப்பு ஆரம்பித்தனர். இடையில் ஷாருக்கான் மகன் போதை பொருள் பிரச்சனையில் சிக்கியதால் அப்படியே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார் ஷாருக்கான்.

இதன்பின் பாலிவுட்டின் பதான் என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்த ஷாருக்கான் அட்லீ படத்தில் நடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது இதனால் அட்லீ படம் அப்படியே மூடிவிடும் என்ற விமர்சனமும் எழுந்தது.

இந்நிலையில் மீண்டும் அட்லீ-ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகைப்படங்கள் இணையத்தில் கசிந்ததுள்ளது. மேலும் படப்பிடிப்பிற்காக நயன் தாராவுன் மும்பை சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.