ஷகீலாவை விட்டு போக இதான் காரணம்..இனிமே அவங்க கூட!! வளர்ப்பு மகள் மிளா ஓபன் டாக்..
ஷகீலா
தென்னிந்திய சினிமாவில் 18+ படங்களில் நடித்து அதன்பின் திரைப்படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷகீலா. சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஷகீலா அம்மா என்ற பெயரோடு இணையத்தில் பயணித்து வருகிறார். பலருக்கும் உதவி வரும் நடிகை ஷகீலா குறித்து, அவரது வளர்ப்பு மகளான திருநங்கை மிளா, வீட்டைவிட்டு வெளியேறியது குறித்து பகிர்ந்துள்ளார்.
திருநங்கை மிளா
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், எனக்கும் ஷகீலாவுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை, ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் அந்த வீட்டில் இருக்க முடியவில்லை. இதனால் தான் ஷகீலா விட்டைவிட்டு வெளியேறினேன். ஷகீலா வீட்டிற்கு சென்றபோது என்னிடம் 15 லட்சம் ரூபாய் கார், 10 லட்சம் பணத்துடன் தான் சென்றேன். நான் ஏழை கிடையாது.
நான் இல்லாதபோது ஷகீலாவுடன் இருப்பவர்கள் தேவையில்லாத பேச்சுக்களை பேசுவது எனக்கு பிடிக்கவில்லை, ஷகிலாவுக்கும் தெரிந்தும் அமைதியாக இருந்ததுதான் மனம் வலித்தது. பின் என் தம்பி வீட்டில் 4 மாதங்கள் இருந்தப்பின் என் பெற்றோரிடம் சென்றுவிட்டேன்.
ஆனால் நான் நம்பிய எல்லோருமே என்னைவிட்டு போவதை தாங்க முடியவில்லை. அப்பா இறந்து போனது ஏற்க முடியாத பாரமாக இருக்கிறது. இந்நேரத்தில் அப்பாவை நான் ரொம்பவே மிஸ் பண்றேன். அவர் இருந்திருந்தால் நான் இந்தநிலைமைக்கு ஆளாகியிருக்கமாட்டேன். ஷகீலா அம்மா ஓகே தான், இனிமே அவங்க கூட பயணிப்பது கடினம் தான் என்று மிளா தெரிவித்துள்ளார்.