வாட்டர்மெலன் திவாகர் ஒரு ஆளா..அவன ஏண்டா கூப்டீங்க!! ஷகீலா கொடுத்த பதில்..
வாட்டர்மெலன் திவாகர்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 7வது சீசனின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் நடந்துள்ளது. அப்போது ஷூட்டிற்கு சென்ற பிக்பாஸ் பிரபலம் வாட்டர் மெலன் திவாகர், தன்னை மாகாபா ஆனந்த், புகழ், கானா வினோத் தாக்கியதாக கூறி போலீஸ் நிலையத்தில் புகாரளித்து அதன்பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அதுகுறித்து பேசினார்.

இந்த விஷயம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாகாபா ஆனந்த், புகழ், கானா வினோத் உள்ளிட்டவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியிருந்தார்.
ஷகீலா
அதில், குக் வித் கோமாளி ஷூட்டில் இருந்த பெண்ணிடம் வரம்புமீறி பேசினார். இதனால் பிரச்சனை ஏற்பட்டதால், விஜய் டிவி நிர்வாகம் தான் அவரை நிகழ்ச்சியில் இருந்து தூக்கிவிட்டது. அதற்கு காரணம் நாங்கள் என்று நினைத்துக் கொண்டு இப்படிப்பட்ட வேலைகளை செய்துள்ளார்.
அவருக்கு எப்படியாவது பிரபலமாக வேண்டும், அதற்காகத்தான் இப்படிப்பட்ட வேலைகளை செய்கிறார் என்று கூறியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து பலரும் விமர்சித்து வரும் நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷகீலாவிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ஷகீலா, நான் புகழுக்கு போன் செய்து என்னடா பிரச்சனை, அவனை எல்லாம் எதற்கு நிகழ்ச்சியில் சேர்த்தீங்க என்று கேட்டேன். அப்போது புகழ், இது எல்லாம் விஜய் டிவி செய்யுற வேலை என்று சொன்னார்.
இந்த விஷயத்தில் நாம் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை. பெரிய ஆளாக வேண்டும் என்பதற்காக எதை எதையோ பேசிக்கொண்டு இருக்கிறார். அவரை கண்டுக்காமல் விட்டுவிட்டாலே பிரச்சனை இல்லை என்று ஷகீலா பேசியுள்ளார்.