கேரளாவில் என்னை யாரும் மதிக்கல..ஆனா இங்க!! குக் வித் கோமாளி ஷாலின் ஜோயா ஓபன் டாக்..

Cooku with Comali Kerala Tamil Actress
By Jai Apr 28, 2026 08:15 AM GMT
Report

ஷாலின் ஜோயா

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் ஒருசில படங்களில் நடித்து இன்று தமிழ் ரசிகர்களின் மனதை ஈர்த்து வரும் நடிகை தான் ஷாலின் ஜோயா.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஷாலின் தமிழில், ராஜா மந்திரி, கண்ணகி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது குக் வித் கோமாளி சீசன் 9 நிகழ்ச்சியில் மாகாபா ஆனந்துடன் தொகுத்து வழங்கி வருகிறார்.

கேரளாவில் என்னை யாரும் மதிக்கல..ஆனா இங்க!! குக் வித் கோமாளி ஷாலின் ஜோயா ஓபன் டாக்.. | Shalin Zoya Says No One Respected Her In Kerala

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோயாவிடம், மலையாள மீடியாவா? தமிழ் மீடியாவா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், தமிழ் என்று தான் சொல்வேன், ஏனென்றால் என்னை அங்கீகரித்தது தமிழ் மக்கள் தான்.

கேரளாவில்

அன்பு, பாசம், மரியாதை எல்லாம் இங்கேதான் கிடைத்தது. கேரளாவில் என்னை யாரும் அந்தளவிற்கு கொண்டாடவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் என்னை அவர்கள் வீட்டுப் பெண்ணாக பார்க்கிறார்கள். ஒருவரை மதிக்காத இடத்தில் இருப்பதைவிட நேசிக்கும் மக்களுடன் இருப்பதே மகிழ்ச்சி.

கேரளாவில் என்னை யாரும் மதிக்கல..ஆனா இங்க!! குக் வித் கோமாளி ஷாலின் ஜோயா ஓபன் டாக்.. | Shalin Zoya Says No One Respected Her In Kerala

தமிழ்நாடு எனக்கு ஒரு இரண்டாவது வீடு இல்லை, அது என் வீடு. என்னை கொண்டாடும் இந்த மக்களையும், இந்த மண்ணையும் நான் அதிகமாக நேசிக்கிறேன் என்று ஷாலின் ஜோயா தெரிவித்துள்ளார்.