ஷாலினிக்கு முன்பே அஜித்தை காதலித்த நடிகை! வெட்கத்தில் ஓடிய பைங்கிளி யார் தெரியுமா?

Ajith Kumar Shalini
By Jai May 07, 2022 03:25 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித் சமீபத்தில் வலிமை படத்திற்கு பிறகு ஏகே 61 படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றுள்ளார். எச் வினோத், போனி கபூர் கூட்டணிக்கு அடுத்த இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் காதல் கவிதை, நீ வருவாய் என போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராகவும், காதல் படத்தில் சந்தியாவின் தோழியாகவும் நடித்திருப்பார் நடிகை சரண்யா நாக்.

இந்நிலையில் அஜித்துடன் சிறுவயதில் நடித்த இளம் நடிகை அஜித் காதல்பற்றி பகிர்ந்திருக்கிறார். 11 வயதில் நடிகை அஜித்திற்கு பிரபோஸ் செய்த குழந்தை நட்சத்திரம் என்ற பேரும் உண்டு.

நீ வருவாயா என படத்தின் போது ஒரு நாள் அஜித் படப்பிடிப்பின் போது அஜித்தை பார்த்து உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என்று கேட்டுள்ளார். அதற்கு அஜித் பேசாமல் சிரித்தாராம். உடனே சீக்கிரமா நான் வளர்ந்துர்றேன் என்று கூறி வெட்கத்துடன் ஓடி விட்டாராம் சரண்யா நாக்.

ஆனால் அடுத்த ஆண்டே அஜித்திற்கும் நடிகை ஷாலினிக்கும் திருமணம் நடைபெற்றதை என்னி புலம்பினாராம் சரண்யா நாக்.

GalleryGalleryGallery