இயக்குநர் சங்கரின் இரண்டாம் மகள் அதிதி சங்கரா இது? யாருடன் ஜோடி போட இருக்காங்க தெரியுமா!

suriya shankar karthi viruman aditishankar
By Edward Sep 06, 2021 12:40 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெயரை பெற்று கோடிக்கணக்கில் பாக்ஸ் ஆபிஸை கொடுப்பவர் இயக்குநர் சங்கர். இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரணுடன் இணைந்துள்ளார்.

கியாரா அத்வானி ஜோடியாக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. சமீபத்தில் இயக்குநர் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கரின் திருமணத்தை நடத்தி வைத்தார். அவருக்கு அடுத்ததாக பிறந்த மகள் அதிதி சங்கர். யாரும் அறியப்படாத இரண்டாம் மகளை தற்போது நடிகையாக அறிமுகப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் சங்கர்.

நடிகர் கார்த்தி நடிக்கும் விருமான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பினையும் முதல் படத்தில் நன்றாக வர வாழ்த்தியும் நடிகர் சூர்யா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.