சொந்த வாழ்க்கையை ஓரங்கட்டிய சங்கர் மகள்! ரொமாண்டிக் இயக்குனருடன் புதிய ஆட்டம்..

Silambarasan Shankar Shanmugam Gautham Vasudev Menon
By Edward May 22, 2022 08:35 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சங்கர் தன்னுடைய மகள்கள் வாழ்க்கையில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். அப்படி கிரிக்கெட் பயிற்சியாளரை முதல் மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் செய்து வைத்து தற்போது போக்சோ வழக்கில் மருமகன் சிக்கியுள்ளதால் பல குழப்பத்தில் இருந்து வருகிறார்.

அதேபோல் இரண்டாம் மகளின் சினிமா வாழ்க்கைக்கு விதையை போட விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். இப்படம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது.

இப்படத்திற்கு பிறகு கோகுல் இயக்கத்தில் கொரோனா குமாரு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்க கமிட்டாகினார். இதன்பின் ரொமாண்டிக் இயக்குனராக தமிழ் சினிமாவில் பேசப்படும் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மலையாள படமான சூப்பர் டூப்பர் ஹிட்டான கப்பேலா படத்தின் ரீமேக்கில் அதிதி சங்கர் கமிட்டாகியுள்ளார்.

அக்காவின் வாழ்க்கை பிரச்சனைகள் இருந்தாலும் அதையெல்லாம் கவனம் செலுத்தாமல் ஒதுக்கி அதிதி சங்கர் தன்னுடைய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.