ரெண்டு மகள்கள் வாழ்க்கையால் மன கஷ்டம்? தலைக்கேறிய பிரச்சனையால் நிம்மதியை இழந்த இயக்குனர் சங்கர்..

Shankar Shanmugam
By Edward May 30, 2022 07:26 AM GMT
Report
155 Shares

பிரம்மாண்ட இயக்க்குனராக தமிழ் சினிமாவில் ஹிட் பலவற்றை கொடுத்து திரும்பிப்பார்க்கை வைக்கும் இயக்குனராக திகழ்பவர் இயக்குனர் சங்கர். தொழில்நுட்பம் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளால் பிரம்மாண்டத்தின் உச்சிக்கே சென்று இயக்கும் தனித்திறமை சங்கருக்கு ஒன்று.

தற்போது இந்தியன் 2 படம் தள்ளிப்போகையில் ராம் சரணின் RC15 (Adhikari)  படத்திற்காக உழைத்து வருகிறார். இதற்கிடையில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த சங்கர் தன் இரு மகள் வாழ்க்கையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

மூத்த மகள் வாழ்க்கை தான் அப்படி என்றால் இளைய மகள் அதிதி சங்கர் அப்பாவுக்கு தெரியாமல் சில படங்களில் கமிட்டாகியிருக்கிறது புது பிரச்சனையை உருவாக்கியுள்ளது.

நடிப்பில் ஆர்வம் இருப்பதால் நடிகையாக சங்கர் அதிதியை முத்தையா இயக்கத்தில் கார்த்தியுடன் விருமன் படத்தில் அறிமுகப்படுத்தினார். படம் முடிந்து ஆகஸ்ட் 31ல் வெளியாகவுள்ள செய்தியும் வெளியானது.

இப்படத்தை தொடர்ந்து அதிதி சங்கர் கெளதம் வாசு தேவன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகி இருப்பதாகவும் செய்திகள் வெளி வந்தது. இதைதொடர்ந்து 4 படங்களில் அதிதி கமிட்டாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த விசயம் சங்கர் காதுக்கே போகவில்லையாம். சினிமாவில் காலெடி எடுத்து வைத்துவிட்டால் அதுவும் ஒரு இயக்குனர் மகள் நடிக்க ஆரம்பித்துவிட்டால் அடுத்தடுத்த வாய்ப்புகள் தானாக வரத்தான் செய்யும்.

அப்படி சங்கர் ஒரு படத்திற்கு மட்டுமே அனுமதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இரு மகள்களாலும் நிம்மதியில்லாம் சங்கர் இருந்து வருவதாகவும் தெரியவருகிறது.