சம்பள விஷயத்தில் கோபத்தை ஏற்படுத்திய பிரபல நடிகை! அதுவும் இந்த இயக்குநரிடமா?

shankar ramcharan kiaraadvani telugucinema
By Edward Aug 13, 2021 09:50 AM GMT
Report

சினிமாவில் தற்போது நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கு சம்பளம் கொடுங்கள் என்று பல முன்னணி நடிகைகள் கடுமையாக கூறி விவாதம் செய்து வருகிறார்கள். அந்தவகையில், அனைத்து பிரச்சனைகளை தாண்டி ஒரு வழியாக பஞ்சாயத்தை முடித்துள்ளார் இயக்குநர் சங்கர்.

இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் அதன் வழக்கையும் சமாளித்து தெலுங்கு நடிகர் ராம் சரணை இயக்கவுள்ளார். அதற்கான பட நாயகிகளை தேர்வு செய்ததில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி உறுதியாகியுள்ளார். மேலும் படத்தில் அஞ்சலியும் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கும் கியாரா அத்வானி, சம்பள விசயத்தில் கடுமையாக நடந்து கொள்கிறாராம். அப்படத்திற்காக சுமார் 5 கோடி அளவிற்கு சம்பளமாக கேட்டுள்ளாராம். இது ஆரம்பத்தில் இருந்து கூறிய கியாராவை சமாதானப்படுத்திய சங்கர் தற்போது 3.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளாராம்.