பாக்யராஜ் மகளை தொடர்ந்து தற்கொலை செய்ய நினைத்த மகன்!! மேடையில் கண்ணீர் விட்ட சாந்தனு..
தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் பாக்யராஜ். சினிமாவில் தன்னுடைய மகன் சாந்தனுவையும் மகள் சரண்யாவையும் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். ஆனால் மகள் சரியான வரவேற்பு பெறாமல் படிப்பில் கவனம் செலுத்த துவங்கி வெளிநாட்டுக்கு சென்றார்.
சரண்யா தற்கொலை முயற்சி
அங்கு காதல் தோல்வியால் பலமுறை தற்கொலைக்கு முயன்று குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டார். அதன்பின் வெளியில் தலைக்காட்டாமல் ஆடை ஆபரண தொழிலை செய்து வருகிறார் சரண்யா. மகன் சாந்தனுவும் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் திணறி வருகிறார்.
சமீபத்தில் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் ராவணக்கோட்டம் என்ற படத்தில் நடித்துள்ளார் சாந்தனு. வரும் மே 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்துள்ளது.
சாந்தனு மன உளைச்சல்
நிகழ்ச்சியில் பேசிய சாந்தனு, சக்கரக்கட்டி படத்திற்கு பின் அதிகம் எதிர்ப்பார்க்கும் படமாக இந்த படம் இருப்பதில் மகிழ்ச்சி என்றும் தயாரிப்பு பணிகளை தானே பார்க்க வேண்டியதாகிவிட்டது என்று கூறியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங்கின் போது இரு சமுகத்தினர் வணங்கும் மரணத்தினை வெட்டிவிட்டார்கள்.
இதனால் பல பிரச்சனைகளை சந்தித்தோம். பல தடைகளை வந்தபோது யாருக்கும் தெரியாமல் ஓரமாக சென்று அழுதிருக்கிறேன் என்று தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட நினைத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் சாந்தனு. தயாரிப்பு மேற்பார்வை நான் பார்த்ததால் நாளுக்கு நாள் மன அழுத்தம் வந்தது. பலர் பல விதமாக ஏமாற்றி பணத்தை பறித்தார்கள் என்று தெரிவித்துள்ளார்.