திருமணத்திற்கு பின் முதல் கிறிஸ்துமஸ்.. மகளுடன் ஷாரிக்!! கண்கவரும் புகைப்படங்கள்
ஷாரிக்
நடிகர் ரியாஸ் கான் மற்றும் அவரது மனைவி உமா ரியாஸ் கான் ஆகியோர் குணச்சித்திர நடிகர்களாக படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகின்றனர்.
அவர்கள் மகன் ஷாரிக் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனார். அதன் பின், பிக் பாஸ் ஜோடிகள் டான்ஸ் ஷோவிலும் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கு பின் பெரிய அளவில் ஷாரிக் வலம் வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் நடக்கவில்லை. ஷாரிக், மரியா ஜெனிபர் என்பவரை காதலித்த சமீபத்தில் திருமணமும் செய்துகொண்டார்.
மரியாவுக்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடைபெற்று அதன் மூலம், ஒரு பெண் குழந்தை இருக்கிறது. சில காரணத்தினால் அந்த திருமணத்தை விட்டு அவர் விலகியும் விட்டார்.
ஷாரிக், திருமணத்திற்கு பின் குடும்பத்துடன் இணைந்து அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடி அதன் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
கண்கவரும் புகைப்படங்கள்
இந்நிலையில், திருமணத்திற்கு பின் வரும் முதல் கிறிஸ்துமஸ் பண்டிகையை தனது மனைவி, மகள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் கொண்டாடி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.