நடிகையானதும் இயக்குனரை போட்டுக் கொடுத்த திரெளபதி பட நடிகை ஷீலா! உசுப்பேற்றும் பா ரஞ்சித்

Sheela Rajkumar Pa. Ranjith Gossip Today
By Edward Jul 21, 2022 07:58 AM GMT
Report

தமிழ் சினிமாவில் குறித்த சாதியை வைத்து படங்களை இயக்கும் இயக்குனர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படி இயக்கி சர்ச்சையிலும் சிக்குவதுண்டு. அந்தவகையில் திரெளபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களை இயக்கி மக்கள் மத்தியில் சாதியை தூண்டிவிடுகிறார் என்ற சர்ச்சைக்கு ஆளாகியவர் தான் இயக்குனர் மோகன் ஜி.

சில ஆண்டுகளுக்கு முன் அவர் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிசி, ஷீலா ராஜ்குமார் நடிப்பில் வெளியாகிய படம் திரெளபதி. சமீபத்தில் ஷீலா ராஜ்குமார் தனியார் செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியொன்றில், அப்படத்தில் நடித்தது ஒரு கனவாக நினைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இயக்குனர் மோகன் எனக்கு திரெளபதி கதையை கூறவே இல்லை. முழு கதையே தெரியாமல் தான் நடித்தேன் என்று போட்டுடைதுள்ளார். ஆனால், படம் வெளியான போது படத்தினை பற்றி அக்குவே ஆணிவேராக கூறியிருந்தார்.

இதை பலர் விமர்சித்து வருகிறார்கள். இதனை பா ரஞ்சித் தான் பேச சொல்லி நடிகைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள் என்று நடிகரும் பட விநியோகஸ்தருமான ஜெயம் எஸ்கே கோபி இணையத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.