நள்ளிரவில் பிரிந்த உயிர்!! மறைந்த ஷீகான் ஹூசைனியின் கடைசிவரை நிறைவேறாத ஆசை..
ஷீகான் ஹூசைனி
மதுரையை சேர்ந்த கரேத்தே மாஸ்டரான ஷீகான் ஹூசைனி, கே பாலச்சந்தர் இயக்கிய புன்னகை மன்னன் படத்தின் மூலம் சினிமாத்துறையில் நடிகராக அறிமுகமாகினார். அதன்பின் விஜய்யின் பத்ரி படத்தில் கரேத்தே சொல்லிக்கொடுப்பவராக நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். ஜெயலலிதாவின் அதீத அன்பு கொண்ட ஹுசைனி, 2005 ஜெயலலிதாவின் பிறந்தநாளில் தன் ரத்தத்தை வைத்து 56 ஓவியங்களை வரைந்தார்.
இந்நிலையில் சமீபகாலமாக ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். விரைவில் அவர் நலம்பெற தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து ரூ. 5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
நிறைவேறாத ஆசை
தனது சிகிச்சைக்காக் யாரிடமும் கையேந்தப்போவதில்லை என்று கூறிய ஹுசைனி, சொத்துக்களை விற்று சிகிச்சையை மேற்கொண்டு வந்துள்ளார். ஆனால் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
ஹுசைனி மருத்துவமனையில் இருக்கும்போது விஜய்யை பார்க்க வேண்டும் என்றும் வில் வித்தையை தமிழகம் முழுவதும் பரப்ப விஜய் முன் எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அவரது ஆசை கடைசிவரை நிறைவேறாமல் போயுள்ளது.