போலீஸ் யூனிபார்ம்-ல டிஸ்கோ ஷாந்தி மாதிரி இருக்கீங்க.. மார்க்கமாக ஷிவானி வெளியிட்ட புகைப்படம்

bigg boss shivani instagram post
By Kathick Jan 08, 2022 10:30 PM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் நடிகையானவர் இளம் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் கதாநாயகியாக நடித்து வந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு, ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். மேலும், தற்போது கமல் ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடித்து வரும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை ஷிவானி, தற்போது போலீஸ் யூனிபார்மில் மார்க்கமாக புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் " தலைவா படத்தில் சந்தானம் கூறும் ' போலீஸ் யூனிபார்ம்-ல டிஸ்கோ ஷாந்தி மாதிரி இருக்கீங்க மேடம்' என்ற மீம் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.

போலீஸ் யூனிபார்ம்-ல டிஸ்கோ ஷாந்தி மாதிரி இருக்கீங்க.. மார்க்கமாக ஷிவானி வெளியிட்ட புகைப்படம் | Shivani In Police Unifrom Photo Viral Picture