மாலையும் கையுமாக இருக்கும் ஷிவானி நாராயணன்! போட்டோ வைரல்
Shivani Narayanan
By Parthiban.A
நடிகை ஷிவானி நாராயணன் சின்னத்திரை ரசிகர்களுக்கு அதிகம் பரிச்சயமானவர். அதை விட இன்ஸ்டாகிராமில் அவரது கிளாமரான டான்ஸ் வீடியோக்களுக்கு மிக அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற அவர் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். சென்ற மாதம் ரிலீஸ் ஆன விக்ரம் படத்தில் அவர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.
சமீபகாலமாக அவரது போட்டோஷூட் ஸ்டில்கள் வைரல் ஆகி வரும் நிலையில் தற்போது அவர் கோவிலுக்கு சென்று கையில் மாலையுடன் இருக்கும் அழகிய போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.


