மோசமான உடல் நிலை! சாமி பட வில்லன் கோட்டா ஸ்ரீனிவாச ராவ்வின் ஷாக்கிங் போட்டோ
Kota Srinivasa Rao
By Karthick Raja
கோட்டா ஸ்ரீனிவாச ராவ்
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ். இவர் தமிழில் வெளிவந்த சாமி, திருப்பாச்சி. கோ, சகுனி என பல திரைப்படங்களில் நடித்துள்ளனர்.
அனைத்து மொழிகளிலும் சேர்த்து 150 படங்களுக்கும் மேல் இவர் நடித்துள்ளார். 80களில் இருந்து நடித்து வரும் அவருக்கு கடந்த 2015ல் பத்மஸ்ரீ விருது அரசு வழங்கி கௌரவித்தது.

ஷாக்கிங் போட்டோ
இந்த நிலையில் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வெளியாகி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடல்நிலை மோசமாகி, மெலிந்து, ஒரு காலில் கட்டு, மற்றொரு காலில் நீக்கப்பட்ட விரல்கள் என தற்போதைய நிலையை பார்த்து ரசிகர்கள் சோகமாகி இருக்கின்றனர். அவரை இந்த நிலையில் பார்ப்பது வேதனையாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.