மெகாஹிட் படமாக்க செல்வராகவன் போட்ட திட்டம்! ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடந்த ரகசியம்

karthi andrea parthiban selvaraghavan ayirathil oruvan
By Edward Aug 19, 2021 12:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தற்போதைய பாகுபலிக்கு நிகராக 2010ல் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி, பார்த்திபன், ரீமாசென், ஆண்ட்ரியா போன்ற நடிகர் நடிகைகள் 3 வருடங்களாக உழைத்து நடித்து வெளியாகியது. அப்படம் அந்தசமயத்தில் பெரியளவில் பேசப்படாமல் எதிர் விமர்சனங்களை எதிர்கொண்டது.

படத்தில் நடித்த அனைவரும் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்கள். சமீபத்தில் அப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் இரண்டாம் பாகம் உண்டு என்பதை இயக்குநர் செல்வராகவன் போஸ்டருடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அளித்தார். இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பட்ஜெட் பற்றிய உண்மையை கூறியுள்ளார் செல்வராகவன்.

ஆயிரத்தில் ஒருவன் படம் 18 கோடி மதிப்பில் தான் உருவாகியது. ஆனால், படத்தின் மிது அதிக எதிர்ப்பார்ப்புகள் இருக்கவேண்டும் என்பதற்காக படத்தின் பட்ஜெட் 32 கோடி என அறிவித்தோம். என்ன ஒருமுட்டாள்தனம். பட்ஜெட் அளவை தொட்டிருந்தாலும் சுமார் என்றே தான் கூறமுடிகிறது. பொய் சொல்ல எந்த கஷ்டம் வந்தாலும் கூறக்கூடாது என்று கற்றுகொண்டேன் என்று கூறியுள்ளார் செல்வராகவன்.