14 வயதில் நடிப்பு!! ஹிட்லர் போல் அடிக்கும் அம்மா!! ஓப்பனாக பேசிய நடிகை ஸ்ருத்திகா...

Cooku with Comali Shrutika Tamil Actress Actress
By Jai Sep 22, 2024 05:30 AM GMT
Report

சூர்யா நடிப்பில் வெளியான் ஸ்ரீ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி நடிகை ஸ்ருத்திகா. 4 படங்களில் மட்டும் நடித்து சினிமாவில் இருந்து விலகி திருமணம் செய்து கொண்ட ஸ்ருத்திகா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்து கொண்டு டைட்டில் வின்னாரானார்.

14 வயதில் நடிப்பு!! ஹிட்லர் போல் அடிக்கும் அம்மா!! ஓப்பனாக பேசிய நடிகை ஸ்ருத்திகா... | Shruthika On Cwc Show And Her Cinema Career

நடிகை ஸ்ருத்திகா

அதன்பின் பல நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவரும் ஸ்ருத்திகா, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சினிமாவில் நடிப்பது அம்மா, அப்பாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

4 படத்தில் நடித்தும் வெற்றி கிடைக்கவில்லை. 14 - 15 வயதில் நடிக்கவந்த தனக்கு நடிப்பில் உள்ள சூட்சமங்கள், தன்னை வெளிப்படுத்தும் வித்தை ஆகியவை தெரியவில்லை.

தோல்விதான் அடுத்தடுத்த வெற்றிகளை தனக்கு கொடுத்ததாகவும் தன்னால் முடியாது என்று யாராவது சொன்னால் கூட அதையே தான் மனதில் ஏற்றி வெறித்தனமாக அதை சாதித்து காட்டுவேன் என்றும் குக் வித் கோமாளி டைட்டிலை வெற்றி பெற அதுதான் காரணம் என்றும் கூறியிருக்கிறார்.

14 வயதில் நடிப்பு!! ஹிட்லர் போல் அடிக்கும் அம்மா!! ஓப்பனாக பேசிய நடிகை ஸ்ருத்திகா... | Shruthika On Cwc Show And Her Cinema Career

என் அம்மா என்னை அடித்து ஒரு ஹிட்லர் போல் வளர்த்ததாகவும் தன் நலனில் அதிகமாக அக்கறை எடுத்துக்கொள்வார் என்றும் தெரிவித்திருக்கிறார்.