காதலனுக்காக அப்பா கமல் ஹாசனை தூக்கி எறிந்த மகள் ஸ்ருதி ஹாசன்..
நடிகர் கமல் ஹாசனுக்கு, சரிகாவிற்கும் பிறந்த மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் என்பதை நாம் அறிவோம். ஸ்ருதி ஹாசன் தற்போது தனது அப்பாவுடன் இல்லாமல் மும்பையில் தனது புதிய காதலுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
அடிக்கடி இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தையும் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். ஒரே வீட்டில் வசித்து வரும் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தாலும், அதற்க்கு அசராமல் இருவரும் பதிலளித்து வருகிறார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த ஸ்ருதி ஹாசனிடம், உங்களுக்கு மிகவும் பிடித்த நபர் யார் என்று கேள்வி கேட்டகப்பட்டது.
இதற்க்கு கமல் ஹாசனை ஸ்ருதி ஹாசன் கூறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், ஸ்ருதி ஹாசன் தனது காதலரின் புகைப்படத்தை பதிவு செய்து, இவர் தான் எனக்கு மிகவும் பிடித்த நபர் என்று கூறிவிட்டார். இதன்முலம் கமல் ஹாசன் ஸ்ருதி ஹாசன் தூக்கி எறிந்துவிட்டாரா போன்ற பல சர்ச்சைகள் சமூக வலைத்தளத்தில் எழுந்துள்ளது.