என் உடம்பு, என்ன வேணும்னாலும் செய்வேன்: கமல்ஹாசன் மகள் ஸ்ருதி
Shruti Haasan
By Parthiban.A
ஸ்ருதி ஹாசன்
நடிகர் கமல் ஹாசன் எப்படி திருமணம் செய்யாமல் கௌதமி உடன் பல வருடங்கள் வாழ்ந்து வந்தார். அதையே பின்பற்றி தற்போது அவரது மகள் ஸ்ருதி ஹாசனும் அவரது காதலர் சாந்தனு உடன் தான் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஸ்ருதி ஹாசன் அளித்திருக்கும் ஒரு பேட்டியில் அவரை பற்றிய பல உண்மைகளை தெரிவித்து இருக்கிறார்.
மூக்கில் சர்ஜரி
ஸ்ருதி அவரது உதடு மற்றும் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றிவிட்டார் என நீண்ட காலமாகவே அவர் மீது ட்ரோல்கள் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது உண்மை தான் என தெரிவித்து இருக்கிறார். என் உடல் என்ன வேண்டுமானாலும் செய்வேன் எனவும் அவர் கூறி இருக்கிறாராம்.
மூக்கில் ஒரு முறை காயம் பட்டபோது சிகிச்சை எடுத்துக்கொண்டு அதை அழகாக்க நினைத்து அப்படி செய்தேன் என ஸ்ருதி கூறி இருக்கிறார்.