62 வயதான நடிகர் ஓகே அவர் மட்டும் வேண்டாமா!! உண்மையை உடைத்த நடிகை ஸ்ருதி ஹாசன்..
தமிழ் சினிமாவில் கமல் ஹாசன் மகளாக பின்னணி பாடகியாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன். அதன்பின், 7 ஆம் அறிவு மற்றும் 3 படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு டாப் இடத்தினை பிடித்தார்.

சமீபத்தில் தமிழில் பல தோல்விகளால் வாய்ப்பில்லாமல் போன ஸ்ருதி ஹாசன் தெலுங்கு பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா இருவரின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் தன் அப்பா கமல் ஹாசனை கண்டுக்கொள்ளாமல் தன் காதலர் சாந்தனுவுடன் தனியாக வசித்து வரும் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் தனக்குள்ள பிரச்சனையை பகிர்ந்துள்ளார். ”தனக்கு மனரீதியாக சில பிரச்சனைகள் இருப்பதாகவும், வீட்டிலோ அல்லது படப்பிடிப்பிலோ நினைத்தது நினைத்தப்படி நடக்காவிடால் உடனே மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவேன் என்று கூறியுள்ளார்.

அப்படி அதிகமான மன உளைச்சல் வந்தார் அதற்கான தெரபி சிகிச்சையை மேற்கொள்வேன் ” என்று ஓப்பனாக பேசியுள்ளார். இதனால் தான் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான வால்டர் வீரய்யா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி வரவில்லையா என்று சிரஞ்சீவி ரசிகர்கள் ஸ்ருதி ஹாசனை கண்டபடி திட்டி வந்தனர்.
வீர சிம்மா ரெட்டி படத்துக்கு மட்டும் போய்விட்டு இதற்கு ஏன் வரவில்லை என்று பலர் கடுமையாக தாக்கிவந்தனர். இந்நிலையில் தனக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதால் தான் நிகழ்ச்சி என்னால் வரமுடியவில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.