குடிப்பழக்கம், லிவிங் டுகெதர் வாழ்க்கை!! அப்பாக்கு தப்பாமல் பிறந்திருக்கு ஸ்ருதி ஹாசன்.. பிரபலம் ஓப்பன் டாக்..
உலக நாயகன் கமல் ஹாசன் மகளாக தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். ஒரு பேட்டியொன்றில், எனக்கு இருந்த மோசமான குடிப்பழக்கத்தை நான் இப்போது விட்டுவிட்டேன். இப்போது நான் தெளிவாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார் ஸ்ருதி ஹாசன்.
இதுகுறித்து சினிமா விமர்சகர் செய்யாறு பாலு விமர்சித்து பேசியிருக்கிறார். சமீபத்தில் பிரஸ் மீட்டில் ஒரு ரிப்போர்ட்டர் ஸ்ருதி ஹாசனிடம், தம் அடிக்கும் பழக்கம் இருக்கா என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் அதெல்லாம் என்னங்க, சொல்லிட்டா இருப்பாங்க, இருக்க தான் செய்யும், என்னுடைய சுதந்திரம் அது, ஆனால் இப்போது விட்டுவிட்டேன் என்று கூறினார்.
எதையும் மூடி மறைக்காமல் காதல், படுக்கையறை போட்டோ என்று போட்டிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு செய்யாறு பாலு, இரு பெண் பிள்ளைகளை, ஆண் பெண் என்று பிரிப்பதில்லை, பெண் பிள்ளையாகவும் பார்க்கவில்லை, முழு சுதந்திரத்தை கொடுக்கிறேன் என்று கமல் தெரிவித்தார்.
அந்த சுதந்திரம் ஒரு காரணமாக இருக்கலாம். குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டுவிட்டேன் என்று கூறியது எனக்கு அதிர்ச்சியாக இல்லை என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். பஞ்ச தந்திரம் படத்தின் போது சிம்ரனுடன் தொடர்புபடுத்தி பத்திரிக்கையில் எழுதினார்கள்.
அதற்கு கமல் ஹாசன் வேறொரு ஊடகத்திற்கு, ஜன்னல் வழியாக எட்டிப்பார்ப்பது போன்று ஸ்டில் கொடுத்தும், என் வீட்டு பெட்ரூம் ஜன்னல்ல எட்டிப்பார்க்க நீ யாருடா என்று கேட்டு பேட்டியளித்தும் இருந்தார். அப்படியே அவரின் ஜெராக்ஸ் தான் ஸ்ருதி ஹாசன். எந்த விமர்சனத்திற்கும் கவலைபடாதவர் ஸ்ருதி ஹாசன் என்று தெரிவித்துள்ளார்.