கமல் ஹாசன் - சரிகா பிரிவு.. வெளிப்படையாக பேசிய நடிகை ஸ்ருதி ஹாசன்
நடிகை வாணி கணபதியை 1978ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் கமல். பின் 1988ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்துக்கு பின் நடிகை சரிகாவை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என இரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் 2004ம் ஆண்டு சரிகா - கமல் தம்பதி விவாகரத்து பெற்று பிரிந்தனர். கமல் ஹாசன் - சரிகாவின் பிரிவு குறித்து அவர்களது மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் வெளிப்படையாக பேசியுள்ளார்.
"தாய் - தந்தையின் பிரிவு எனக்கு வருத்தத்தை விட, வாழ்க்கையின் ஒரு மதிப்புமிக்க பாடத்தை கற்று தந்தது. குறிப்பாக ஒரு பெண் பொருளாதார ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சுதந்திரமாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியது" என்று அவர் கூறியுள்ளார்.
என் அம்மா சரிகா விவாகரத்துக்கு பின் தன்னம்பிக்கையுடன், தைரியமாக நின்று தனது வாழ்க்கையை மருவடிவமைத்த விதம் எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்தது. இந்த சம்பவம் ஒரு பெண் உணர்ச்சி ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் தன்னிறைவு பெற்றிருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை எனக்கு உணர்த்தியது. அது என் வாழ்க்கையின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக மாறியது" என கூறியிருக்கிறார்.