திருமணத்திற்கு பின் தொழில் ரீதியாக கமல் மகளுக்கு உதவிய தனுஷ்.. நடிகை ஸ்ருதி ஹாசன் கூறிய உண்மை
உலக நாயகன் கமல் ஹாசன் மகளாக பின்னணி பாடகியாகவும் நடிகையாகவும் திகழ்ந்து பிரபலமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். 7 ஆம் அறிவு, 3 போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தார்.
அதன்பின் அண் நண்பரை காதலித்து கருத்து வேறுபாட்டால் சில ஆண்டுகளுக்கு முன் காதல் தோல்வியை சந்தித்தார். அதன்பின் அப்பா, அம்மாவை விட்டு தனியாக வாழ்ந்து வந்த ஸ்ருதி ஹாசன் சாந்தனு என்ற டூட்டுல் கலைஞருடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் பொருளாதார பிரச்சனையை சந்தித்ததாகவும் அதிலிருந்து, அவரது அப்பா கமல் ஹாசனிடம் கூட பொருளாதார ரீதியாக எதையும் கேட்டதில்லை என்றும் கூறியிருந்தார் ஸ்ருதி ஹாசன்.
ஸ்ருதி ஹாசன் ஆரம்பத்தில் இருந்தே பல காதல் வதந்திகளில் சிக்கி வந்தார். அப்படி 3 படத்தில் நடித்த போது நடிகர் தனுஷுடன் காதலில் இருந்ததாகவும் கூறப்பட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 10 வருடத்திற்கு முன் தனுஷ் தனக்கு எப்படிப்பட்டவர் என்ற உண்மையை கூறியிருக்கிறார்.
நானும் தனுஷும் நல்ல நண்பர்கள். எனக்கு தொழில் ரீதியாக பல உதவிகளை செய்துள்ளார். என்னை குறித்து பல வதந்திகள் எழுகிறது.
ஆனால் நான் அனைவரிடமும் சென்று இந்த வதந்தியை நியாய படுத்த முடியாது என்று கூறியுள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன். இதன்பின் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடனும் காதல் கிசுகிசுக்களில் சிக்கினார் நடிகை ஸ்ருதி ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.