உயிரைக் கொடுத்து நான் பாடினேன்..ஆனால்!! கண்கலங்கிய பாடகி ஸ்வேதா மோகன்..
தென்னிந்திய சினிமாவில் டாப் பாடகியாக திகழ்ந்து பல ஆயிரம் பாடல்களை பாடியவர் தான் பாடகி ஸ்வேதா மோகன். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் தன்னுடைய வாழ்க்கையிலும் தொழிலிலும் சந்தித்த சவால்கள் பற்றி பகிர்ந்துள்ளார்.

ஸ்வேதா மோகன்
அதில், ஒரு பாடகராக ஒரு பாடலை பதிவு செய்வது என்பது வெறும் வேலையில்லை, அது முழு மனிதனுடனும் உணர்ச்சியுடனும் செய்யப்படும் ஒரு அனுபவம் தான்.
ஒரு பாடலை பாடிவிட்டப்பின் , அது எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மனதுக்குள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் அந்த பாடல் வெளியானபோது தன் குரலுக்கு பதிலாக வேறு ஒருவரின் குரலை கேட்கும்போது ஏற்பட்டும் அதிர்ச்சி, ஏமாற்றம் ஆகியவை சொல்லமுடியாதவை.

இது ஒரு முறை அல்ல பலமுறை இப்படியான அனுபவத்தை சந்தித்து இருக்கிறேன். இது எனக்கு மட்டுமில்லாமல் பல பாடகிகளுக்கும் நடக்கும் ஒரு நிலை என்று கூறியிருக்கிறார்.
மேலும், ஒரு பாடல் முடிந்ததும் அது பாடகரின் மனதில் தொடர்ந்து வாழும், அந்த பாடலோடு ஒரு தனி உணர்ச்சியான பிணைப்பு உருவாகிறது. இதனால் அந்த பாடல் வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டால், அது ஒரு தொழில்நுட்ப மாற்றமட்டுமல்ல, ஒரு எமோஷனல் துண்டிப்பு போலத்தான் இருக்கும் என்று பேசியிருக்கிறார் ஸ்வேதா மோகன்.