காதல் உறவில் சித்தார்த் - அதிதி.. உறுதி செய்த பிரமாண்ட நிகழ்ச்சி
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சித்தார்த். இவர் விரைவில் சினிமாவை விட்டு விலகி தொழிலதிபர் ஆவப்போவதாக தகவல் வெளியாகி வருகின்றன.
நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் இருவரும் சில மாதங்களாக காதலித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. அதற்க்கு ஏற்றார் போல் பல இடங்களில் இருவரும் ஒன்றாக சென்று வருகிறார்கள். ஆனால், இருவரும் காதலிக்கிறோம் என்பது குறித்து இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை. இதுவே இவர்களின் காதலை உறுதி செய்ய ஒரு வாய்ப்பாக ரசிகர்களுக்கு அமைந்துவிட்டது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இருவரும் ஒரே காரில் வந்து இறங்கினார்கள். விழா நடைபெறும் இடத்திலும் ஒன்றாகவே அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்தனர்.
இதை பார்த்த ரசிகர்கள் இருவரின் காதல் உறுதியானதாக பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து விரைவில் அவர்களே அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.